search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய் மீட்பு"

    அமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் நாயை மீட்க போனவர் எதிர்பாராதவிதமாக உள்ளே சிக்கிக்கொண்டதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். #HouseFire #Dog #ManDies
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மேய்ன் மாகாணம் ஓர்லண்ட் நகரை சேர்ந்தவர் சாம் கிராபோர்ட் (வயது 40). இவர் அங்குள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். சாம் கிராபோர்ட், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். அந்த நாய் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் வீடு முழுவதும் தீ பரவிவிட்டதால், சாம் கிராபோர்ட் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்தார். அவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

    இதை எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்ட சாம் கிராபோர்ட், தனது பாசத்துக்குரிய நாய் தன்னுடன் இல்லை என்பதை உணர்ந்து பதறிப்போனார்.

    உடனே அவர் நாயை தேடி பற்றி எரியும் வீட்டுக்குள் சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் உள்ளே சிக்கிக்கொண்டார். தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்த பிறகு, கரிக்கட்டையான நிலையில் சாம் கிராபோர்ட் உடல் மீட்கப்பட்டது. அதே சமயம் அந்த நாயின் உடல் கிடைக்கவில்லை. நாயின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
    பள்ளிபாளையம் அருகே வெள்ளத்தில் சிக்கிய நாயை சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர்.
    திருச்செங்கோடு:

    மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தொடர் வெள்ளப்பெருக்கால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    அதுபோல் காவிரி ஆற்றங்கரையோரம் பயிரிடப்பட்ட வாழை, வெற்றிலை, மரவள்ளிக் கிழங்கு, தென்னை மர தோட்டங்களில் வெள்ளம் புகுந்து ஓடுவதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. நீரில் உள்ள பல பயிர்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இந்த பயிர்கள் வேரோடு ஆற்றில் இழுத்துச் செல்லப்படுகின்றன.

    பள்ளிபாளையம் அருகே உள்ள கொக்கராயன்பேட்டை வழியாக காவிரி ஆறு செல்கிறது. இந்த கரையோரம் இருக்கும் கார்த்தி என்பவரது தென்னை மரத்தோட்டத்தில் நேற்று இரவு வெள்ளம் புகுந்தது.

    தோட்டத்தில் நின்ற நாய் ஒன்று இந்த எதிர்பாராத வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அது தப்பிக்க முடியாமல் வெள்ளத்தில் அங்கும், இங்குமாக தத்தளித்துக் கொண்டிருந்தது.

    நேரம் செல்ல செல்ல தோட்டத்தில் நீரின் அளவு உயர்ந்தது. நீரோட்டமும் அதிகரித்தது. இதனால் நாய் நீந்திச் சென்று தென்னை மரஉச்சியில் ஏறி மட்டைக்கு இடையில் பதுங்கி இருந்து கொண்டது.

    மேலும் காப்பாற்ற வேண்டி அபாய குரல் எழுப்பியது. தொடர்ந்து குரைத்து கொண்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து பார்த்தனர்.

    அப்போது தோட்டத்தில் தென்னை மர உச்சி வரை வெள்ளம் பெருக்கெடுத்து சீறி பாய்ந்து சென்றதால், வீரர்களால் உடனடியாக வெள்ளத்தில் இறங்கி செல்ல முடியவில்லை. இதையடுத்து 2 மரத்திற்கு இடையே கயிறு கட்டியபடி, ரப்பர் படகு மூலமாக சென்று தென்னை மர உச்சியில் இருந்த நாயை உயிருடன் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாய் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ×